தமிழகத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.