இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் பிரதான் மந்திரி உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக எவ்வாறு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதோ அதே போல தற்போதும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேருவதற்கு முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வீட்டில் எந்த ஒரு எல்பிஜி சிலிண்டர் இல்லாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். இதற்காக குடும்ப அட்டை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சான்றிதழ் கட்டாயம்.
இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடமிருந்து பெற வேண்டும். அல்லது https://www.pmujjwalayojana.com/ என்ற வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்பவும். பின்னர் நிரப்பிய படிவத்தை எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இதனைத்தொடர்ந்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் விண்ணப்பமும் வழங்கப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.