எதையும் தெளிவான சிந்தனையுடன் செய்யக்கூடிய மேஷம் ராசி அன்பர்களே..!!பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம் பெரும். குடும்பத்தில் முக்கிய தேவைகள் நிறைவேறும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். இன்று குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் இன்றைக்கு கூடும்.
விடாமுயற்சியுடன் காரியங்களை செய்தால் சாதகமான பலன்களைத் தரக்கூடும். பணவரவு நல்லபடியாக வந்து சேரும். கொடுக்கல்-வாங்கல் விஷயங்களும் சிறப்பாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்