Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நகை கடைக்கு சென்ற பெண்கள்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

நகை வாங்குவது போல நடித்து இரண்டு பெண்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கோவிந்த ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராமின் கடைக்கு இரண்டு பெண்கள் நகை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அந்த இரண்டு பெண்களும் கடையில் இருந்த 14 கிராம் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இது குறித்து அறிந்த கொவிந்தராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை வாங்குவது போல் நடித்து கொள்ளையடித்து சென்ற இரண்டு பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |