Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இப்படி செய்தால் திருமணம் நடக்கும்” அதிர்ச்சியடைந்த தம்பதிகள்…. சென்னையில் பரபரப்பு…!!

திருமண தடை போக்குவதாக கூறி வயதான தம்பதிகளிடமிருந்து இருவர் பணம் மற்றும் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ராமச்சந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு அவ்வையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகாமல் 32 வயதில் ஒரு மகனும், 24 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமச்சந்திரன் வீட்டிற்கு ஜோதிடம் பார்க்க சென்ற வாலிபர் உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது எனவும், அதற்கான பரிகாரத்தை செய்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய தம்பதிகள் 24 ஆயிரம் ரூபாயை கொடுத்தவுடன் அந்த வாலிபர் சுமார் ஒரு மணி நேரம் பூஜைகள் செய்து விட்டு அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ராமச்சந்திரனின் செல்போன் எண்ணிற்கு மறுநாள் காலை தொடர்பு கொண்ட அந்த வாலிபர் உங்களது தங்க நகைகளை கழற்றி புளிக்குள் வைத்து பூஜை செய்யுங்கள் எனவும், ஒரு சாமியார் வந்து மீண்டும் பரிகாரம் செய்தால் தான் தோஷம் முழுமையாக நீங்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனையும் உண்மை என்று நம்பிய அந்த தம்பதிகள் அந்த வாலிபர் கூறியபடி தங்க நகைகளை வைத்து பூஜை செய்துள்ளனர்.

அப்போது ராமசந்திரனின் வீட்டிற்கு சென்ற சாமியார் ஒருவர் ஒரு செம்பில் அந்த தங்க நகைகளை போட்டு மஞ்சள் துணியால் மூடி உள்ளார். அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து அந்த தங்க நகையை எடுக்குமாறு கூறிவிட்டு சாமியார் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்படி தம்பதிகள் மூன்று நாட்கள் கழித்து செம்பில் பார்த்த போது தங்க நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |