Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எனவே சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுதல் அல்லது அருகில் செல்லுதல் கூடாது. மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது. அவ்வாறு ஒதுங்கினால் இடி மின்னலால் ஆபத்து நேரக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

Categories

Tech |