Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு மாணவனின் செயல்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன் மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த மாணவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |