மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன பேட்டக்கானபள்ளி பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் தனது மாமனாரான கோவிந்தப்பா என்பவரது விவசாய நிலத்தில் காட்டு விலங்குகள் நிற்கின்றதா என்பதை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது கோவிந்தன் என்பவரின் நிலத்தில் காட்டு பன்றிகளுக்காக அமைத்துள்ள மின்வேலியில் சிக்கியதால் சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.