தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியவாணன் மற்றும் தஞ்சாவூர் பூக்கார தெருவைச் சேர்ந்த சூர்யா, சென்னையைச் அப்துல் மஜீத் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் இவர்கள் மூவரையும் காவல்துறையினர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சத்தியவானன் என்பவர் திடீர் மரணமடைந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் அடித்ததில் மரணமடைந்ததாக அந்த பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.