Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கோவில் நகைகள் திருட்டு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலின் மேற்கூரையை பிரித்து மர்ம நபர்கள் 20 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பகுதியில் ஊஞ்சல் மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் பூசாரி பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து காலை நேரத்தில் பொதுமக்கள் கோவில் முன்பாக சென்று கொண்டிருக்கும் போது கோவிலின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின்படி விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் மேற்கூரை மூலமாக கோவிலின் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது பற்றி பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவ்விடத்தை சோதனை செய்து மக்களிடம் விசாரணை செய்துள்ளனர். அதன்பின் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |