Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவில் செல்லும் சாலைக்கு…… முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பெயர்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்(89)  ரத்த தொற்றுநோய் காரணமாக லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2009 முதல் 2014 ஆண்டுகளில் செயல்பட்டவர். உத்தரப்பிரதேசத்தில் இவர் முதல்வராக இருந்த காலத்தில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் செல்லும் சாலைக்கு இவரது  பெயர் வைக்கப்படும் என்று உபி துணை முதல்வர் மௌரியா அறிவித்துள்ளார்.

Categories

Tech |