Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “தொழில் வியாபாரம் செழித்து வளரும்”… நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும்.!!

அனைவரையும் தன் கண் பார்வை யால் வசீகரிக்க கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று உங்களின் இனிய அணுகுமுறை நல்ல பலனைக் கொடுக்கும். உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு  நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும்.

உங்களுடைய அந்தஸ்து உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இன்று ஏற்படும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும் ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் இன்றைய காரியங்களை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கை குட்டையை எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |