Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்”… பொருளாதாரமும் உயரும்.!!

சொன்ன சொல்லை  நிறைவேற்றி காட்டக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் பேச்சு செயலில் நிதானம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். பணவரவில் தாமதம் கொஞ்சம் இருக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். இசை பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும். இன்று வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். பணவரவு மன திருப்தியை கொடுக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவரது நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகவே நடந்து முடியும்.

வாகனங்களை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்துங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய நிதி நிலைமை சரி செய்யப்படும். இன்று பொருளாதாரமும் உயரும் நாளாக இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று வெளியில் செல்லும்பொழுது முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையோ மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |