புளியமரத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு செல்லூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். அவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவில் பழங்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் பழங்களை கொள்முதல் செய்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.