Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் விற்பனை செய்ய கூடாது… பெண் உட்பட 3 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள ஏகலூத்து சாலையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு பெண் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த சிவனம்மாள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் வைத்திருந்த பையில் 1 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த பெண்ணையும் கைது செய்துள்ளனர். இதேபோல் கூடலூர் மற்றும் வருசநாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |