Categories
தேசிய செய்திகள்

பயங்கர நிலச்சரிவு…. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!!!

14 பயணிகளுடன் சென்ற பேருந்தில் இருந்த பயணிகள் நிலச்சரிவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 14 பயணிகளுடன் சென்ற பேருந்து நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நைனிடால் மலைப்பகுதியில் 14 பயணிகளுடன் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மெதுவாக மரம் செடி கொடிகள் முதலில் சரிய தொடங்கியது.

பின்னர் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுனர் மேற்கொண்டு பேருந்தை இயக்காமல் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்த பயணிகளை வெளியேற்றினர். இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டது. ஒரு நிமிடத்தில் நிலச்சரிவால் அந்த சாலையே மறைந்துவிட்டது. பேருந்து ஓட்டுனர் வாகனத்தை சில அடிகள் முன்னே நகர்த்தி இருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் ஓட்டுநர் முன்னோக்கி இயக்காமல் பேருந்தை பின்னோக்கி நகர்த்தி பெரும் விபத்தை தவிர்த்துவிட்டார்.

Categories

Tech |