Categories
தேசிய செய்திகள்

வாழை தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன்… என்ன நடந்தது..? கணவனுக்கு வலைவீச்சு…!!!

கர்நாடக மாநிலம் மண்டியா என்ற பகுதியை அடுத்த அருதேஷ்வரனஹள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா மற்றும் ராணி என்ற தம்பதிகள். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவராஜா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியா தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் சிவராஜா ராணியின் உடலை வீட்டிற்கு பின்புறம் உள்ள வாழைத்தோப்பில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தோட்ட உரிமையாளர் மண்டியா புறநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புதைந்து இருந்த ராணியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவராஜாவை தேடி வருகின்றனர்.

Categories

Tech |