Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு பட பாடல் செய்த அசத்தல் சாதனை…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

நடிகர் சிம்புவின் பாடல் யூடியூபில் செய்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் மாநாடு திரைப்படத்தினை தொடர்ந்து அவர் தற்போது பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை முடித்த பின் அடுத்ததாக நடிகர் சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல எனும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான ஈஸ்வரன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ஈஸ்வரன் படத்தில் இடம்பெற்றிருந்த மாங்கல்யம் தந்துனானே என்ற பாடல் தற்போது யூடியூபில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் முதல் முறையாக செய்த இந்த சாதனையை  அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |