Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. தொழிலாளி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி பகுதியில் கூலி தொழிலாளியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாரிமுத்து சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நின்று கொண்டிருந்த போது 4 பேர் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கத்தியை காட்டி மிரட்டி மாரிமுத்துவிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் மாரிமுத்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலித் தொழிலாளியிடம் இருந்து பணம் பறித்த குற்றத்திற்காக மகேஸ்வரன், தினேஷ்குமார், விஜய், முகில் குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |