ஓடும் கார் திடீரென பற்றி எரிந்த விபத்தில் வாலிபர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுள்ளது. இந்த கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். அதன் பின் எரிந்த கார் கதவை திறந்து பார்த்தபோது ஓட்டுநர் சீட்டில் வாலிபர் ஒருவர் உடல் கருகி சடலமாக இருந்ததை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் உடல் கருகி இறந்த வாலிபர் தென்னூர் மூக்கொல்லை பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.