மெக்சிகோவில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கனமழையுடன் வீசிய காற்றினால் 8 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள்.
மெக்சிகோவில் வெராகூரூஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கிரேஸ் என்னும் சூறாவளி புயல் மிகுந்த கன மழையுடன் வீசியுள்ளது. இவ்வாறு பெய்த கன மழையினால் வெராகூரூஸ் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி அந்நாட்டிலுள்ள பல இடங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது.
மேலும் இந்த கிரேஸ் என்னும் சூறாவளியில் சிக்கி மெக்சிகோ நாட்டிலுள்ள 8 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். இதனையடுத்து மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த கிரேஸ் சூறாவளியினால் மெக்சிகோ நாட்டிலுள்ள பல வீடுகள் இடிந்து விழுந்ததோடு மட்டுமின்றி அந்நாட்டில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.