Categories
உலக செய்திகள்

தலிபான்களை சந்திக்கும் முதல் தலைவர்…. ஆப்கனில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம்…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்களால் அந்நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் காபூலுக்கு வருகை தந்து தலிபான்களின் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான குரேஷி கடந்த சில நாட்களுக்கு முன்பு சில முக்கிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரஷ்ய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி பாகிஸ்தான் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள Tolo நியூஸ் ஏஜென்சி முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் உருவாக்கும் புதிய அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் தன்னுடைய பங்கை அளிக்க விரும்புவதை வெளிக்காட்டும் விதமாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆப்கானிஸ்தானிற்கு வருகை புரியவுள்ளார் என்பதாகும். மேலும் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் காபூலுக்கு வந்தபிறகு தாலிபான்களின் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Categories

Tech |