ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவின் அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் எனும் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில் ஆப்பிரிக்கா காட்டில் 16 போட்டியாளர்களை கொண்டு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் அதிரடியான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் விக்ராந்த், நந்தா, உமாபதி ராமையா, பெசன்ட் ரவி, விஜயலட்சுமி, ஸ்ருஷ்டி டங்கே, காயத்ரி ரெட்டி, vj பார்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12 முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/DUWLqDVjwXU