தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தற்போது வேதாளம் திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.
தெலுங்கில் ரீமேக்காகும் இப்படத்திற்கு Bholaa Shankar என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவியும் அவரது தங்கை கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கின்றனர். நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு இப்படத்தின் புதிய டீசர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.