சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் என்பவரது வயலில் ஒரு பேரலில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் 50 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சௌந்தரராஜன், சங்கர் மற்றும் கண்ணபிரான் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.