சாலையை கடக்க முயற்சி செய்த போது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் பாளையம் பகுதியில் அமிர்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக அமிர்தராஜ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அமிர்தராஜ் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயற்சி செய்த போது பெரம்பலூர் நோக்கி வேகமாக சென்ற லாரி இவர் மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அமிர்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமிர்தராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவரான மாரி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.