Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிய ஆட்டோ டிரைவர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஆட்டோ டிரைவரான காளிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிராஜுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காளிராஜ் தனது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தூங்கி விட்டார்.

இதனையடுத்து நீண்ட நேரமாகியும் காளிராஜ்  எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்பி பார்த்துள்ளனர். அப்போது காளிராஜ் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கயத்தாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |