மின்னல் தாக்கி இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கள்ளிமேடு, கரியாப்பட்டினம்,குரவப்புலம், தோப்புத்துறை போன்ற பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் கரியாப்பட்டினம் பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இரவில் மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் தென்னை மரங்களில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்து விட்டது. மேலும் தமிழ்ச்செல்வனின் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்து விட்டது.