Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் இராசிக்கு… “தன்னம்பிக்கை அதிகரிக்கும்”… காதலில் வயப்படக்கூடிய சூழல் உருவாகும்..!!

மற்றவர்களுக்காக பாடுபட்டு உழைக்கும் மீனம் ராசி அன்பர்களே..!! நண்பர்கள் உறவினர்கள் அதிக அன்பு பாராட்டுவார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாகவே நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டில் உபயோகப் பொருட்களை வாங்க கூடும். வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்துவீர்கள். இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனமாக செய்யுங்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வீண் பகை ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.

வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய  சூழல் இன்று உருவாகும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறக்கூடும். ஆசிரியர்கள் சொல்படி  நடந்துகொண்டால் மென்மேலும் வளர்ச்சிகளை பெற முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைகுட்டையை எடுத்து சென்றால் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில்  காக்கைக்கு உணவு வைத்தால்  உங்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய நிகழ்வுகள் நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |