நதி ஒன்றிலிருந்து உயிரற்ற சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் Natashquan எனும் நதி அமைந்துள்ளது. அந்த நதியிலிருந்து கடந்த 22 ஆம் தேதி உயிரற்ற சடலம் ஒன்றை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் படகு ஒன்று நதிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த படகை பிடிப்பதற்காக இளைஞரும் நதிக்குள் இறங்கியுள்ளார். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததனால் படகை பிடிக்க நதிக்குள் இறங்கிய இளைஞரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடன் இருந்த சிலர் அவரை காப்பாற்ற முயன்ற போது இளைஞர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனைக்கண்ட மக்கள் நதிக்குள் இறங்கினால் தங்களுக்கும் அதே நிலைமை தான் ஏற்படும் என அஞ்சிய அவர்கள் நதியில் இறங்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வான் மூலமாகவும் படகுகள் மூலமாகவும் இளைஞரை தேடி வந்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர் கிடைக்கவில்லை. அதனால் தேடுதல் பணியானது முடிவுக்கு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உடையதாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.