டி-ஷர்ட்டில் கேலிச்சித்திரம் அச்சிடப்பட்டுள்ளதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தும் விற்பனை செய்ய தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் அங்கிருந்து பொதுமக்கள் அவர்களின் சொந்த நாட்டிற்கே திரும்பி வருகின்றனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் காபூலில் இருந்து அமெரிக்கா c -17 ராணுவ விமானத்தின் சக்கரத்தில் பயணித்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் நடுவானில் கீழே விழுந்து பலியான சோகம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து சமூக வலைதளங்களில் பலபேர் ஆப்கானில் நிலவும் சூழலை எண்ணி பரிதாபப்பட்டனர்.
இந்த நிலையில் இச்சம்பவத்தை கேலி செய்யும் விதமாக அமெரிக்கன் e-commerce இணையமான Etsy-யில் ConaneShop என்ற கடையில் டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுகிறது. அந்த டி- ஷர்ட்டில் “காபூல் ஸ்கைடிவிங் கிளப், எஸ்.டி. 2021” என்ற தொடருன் இருவர் கீழே விழுவது போன்ற காட்சியானது அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட இணையவாசிகள் அந்த கடையை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர். மேலும் அந்த டி-ஷர்ட்டை விற்பனை செய்ய தடை விதிக்குமாறு கோரிக்கை அளித்துள்ளனர்.