Categories
உலக செய்திகள்

கழிவறை சென்றவருக்கு நேர்ந்த கதி…. புலியின் வேட்டை…. தேடும் பணியில் அதிகாரிகள்….!!

மரம் அறுக்கும் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் இரவில் கழிவறைக்கு சென்றபோது புலி அடித்து இழுத்து சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு மரம் அறுக்கும் வேலைக்காக 41 வயதுடைய Mikhail Shabaldin என்ற ஒருவர் சென்றுள்ளார். அப்போது இரவில் கழிவறைக்கு சென்ற Mikhail Shabaldinனை காணவில்லை. அதன்பின் அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவரை தேடும் போது கழிவறைக்கு அருகில் டாய்லெட் பேப்பர் துண்டுகள் மற்றும் ரத்தம் படிந்த உடைகளும் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். பின்னர் கழிவறைக்கு அருகில் புலியின் கால் தடங்களுக்கு இருப்பதையும் அவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து Mikhail Shabaldinனை புலிதான் அடித்து இழுத்து சென்றிக்கும் என சக தொழிலாளர்கள் புரிந்து கொண்டனர். மேலும் ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவில் உலகிலேயே மிகப் பெரிய புலி வகையை சேர்ந்த Majestic amur tiger காணப்படும். இந்த புலி இனங்கள் விலங்குகளையும் மனிதர்களையும் வேட்டையாடக் கூடியவையாகும்.

இந்நிலையில் Mikhail Shabaldin இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதற்காக வெளியே சென்றதால்தான் புலி அவரை அடித்து இழுத்துச் சென்றிருக்கும் என தொழிலாளர்கள் கருதி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் Mikhail Shabaldinனை தேடும் பணியை துவங்கியுள்ளனர். இருப்பினும் அவரை உயிருடன் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பது உள்ளூர் மக்களின் கருத்து. மேலும் பசியுடன் இருந்த அல்லது காயமடைந்த புலிதான் Mikhail Shabaldinனை அடித்து இழுத்துச் சென்றிருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |