நடிகர் விஜய் சேதுபதி ‘இடிமுழக்கம்’ படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனு ராமசாமி தற்போது இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாகவும், காயத்ரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார் . மேலும் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
@SkymanFilms @Kalaimagan20 தயாரிப்பில் தேசிய விருது இயக்குநர் @seenuramasamy இயக்கத்தில் , நடிகர் @gvprakash -ன் மிரட்டல் நடிப்பில் உருவாகி வரும் #IdiMuzhakkam படப்பிடிப்பு தளத்திற்கு மக்கள் செல்வன் @VijaySethuOffl வருகை
@DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/yMmj7SiO3K
— SKYMAN FILMS INTERNATIONAL (@SkymanFilms) August 23, 2021
இந்நிலையில் இடிமுழக்கம் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி சர்ப்ரைஸ் விசிட் அடித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல், மாமனிதன், தர்மதுரை ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.