வலிப்பு ஏற்பட்டு சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கூலி தொழிலாளியான சாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷ்கா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அனுஷ்காவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த போது திடீரென அனுஷ்காவிற்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அனுஷ்காவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.