மர்ம நபர்கள் முதியவரிடம் இருந்து 6 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கூடல் நகர் பகுதியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கூட்ட நெரிசலில் ராமச்சந்திரனிடம் இருந்த 6 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
அதன் பின் தங்க நகை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.