கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ஹைதர் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் செல்போன் கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 52 ஆயிரம் ரூபாய் பணம், 1 லட்சம் மதிப்பிலான 9 விலை உயர்ந்த செல்போன்கள் போன்றவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை அடுத்து மறுநாள் காலை கடைக்கு சென்ற ஹைதர் அலி பணம் மற்றும் செல்போன்கள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஹைதர் அலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.