Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! பிரச்சனைகள் தீரும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! முன்கோபத்தை காட்டாமல் பேச வேண்டும்.

இன்று பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக தீர்ந்துவிடும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயர்ந்துவிடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணங்கள் இருக்கும். தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் இருக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி இருக்கும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பை உயர்த்த வேண்டும். எதையும் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும். எந்த ஒரு பிரச்சனையையும் சமாளிக்கக்கூடிய திறமை இருக்கும். உழைத்து பயனடைய வேண்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லும் போது கவனம் வேண்டும். முன்கோபத்தை காட்டாமல் பேச வேண்டும்.

சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். அதனை பெரிதுபடுத்தாமல் அப்படியே அமைதியாக விட்டுவிடுவது நல்லது. பெண்களுக்கு சில காரியங்களில் தடைகள் இருக்கும். தடைகளை உடைத்தெறிந்துதான் முன்னேறிச் செல்ல முடியும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்பட்டு தான் சரியாகும். முன்கோபம் வராமல் பேச வேண்டும். மாணவர்களுக்கு நல்ல நாள். சில விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு ஆர்வமாக இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |