மகரம் ராசி அன்பர்களே.! வருமானம் தராத வேலைகளை எடுத்துச் செய்ய வேண்டாம்.
இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இளைய சகோதரர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எண்ணற்ற மகிழ்ச்சி இருக்கும். முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. ஆனாலும் நல்லபடியாக இருக்கும். மனோதைரியம் கூடிவிடும். எப்படிப்பட்ட பிரச்சனையும் சமாளிக்ககூடிய ஆற்றல் இருக்கும். எதையும் முன்னேற்றகரமாக வழி நடத்திச் செல்வீர்கள். மற்றவரின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதையும் உங்களால் சுறுசுறுப்புடன் செய்ய முடியும். அவசியமற்ற வேலைகளை தயவுசெய்து ஈடுபடவேண்டாம். வருமானம் தராத வேலைகளை எடுத்துச் செய்ய வேண்டாம்.
எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆழ்ந்த சிந்தனையுடன் யோசித்து செயல்படுவது நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சிக்கல்கள் இருந்தாலும் சரியாகிவிடும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவரை கண்டிப்பாக கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். காதல் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை ஏற்படும். நினைத்தது நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை