Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு….! சிந்தனை மேலோங்கும்….! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே.! எல்லாவற்றையும் உங்களால் சிறப்பாக செய்யமுடியும்.

இன்று புதுப்புது சிந்தனைகள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். புதுப்புது விஷயங்களில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனையில் இருப்பீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆர்வமுடன் எதையும் செய்வீர்கள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். சோர்வாக காணப்படுவீர்கள். பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். நெருக்கம் கூடிவிடும். இல்லத்தில் மழலைச் செல்வம் கேட்கக்கூடிய சந்தோஷமான செய்திகள் இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை இருக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடிவிடும். சக நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

எல்லாவற்றையும் உங்களால் சிறப்பாக செய்யமுடியும். பெண்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். பெண்கள் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுய தேவைகளும் பூர்த்தியாகும். சிக்கலை ஏற்படுத்திய காதல்கள் எல்லாம் சரியாகிவிடும். காதல் கண்டிப்பாக கைகூடிவிடும். மனம் தளராமல் செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை கூடும். பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். பய உணர்வை தவிர்த்து விட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அப்படியே என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |