Categories
அரசியல் மாநில செய்திகள்

1,64,00,000 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தம் – சத்யபிரத சாகு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இப்பணிகளை ஆய்வு செய்ய பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யபிரத சாகு, ”தமிழ்நாடு முழுவதும் மூன்று மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அலுவலர்கள் வீதம் மொத்தமாக பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் வாக்காளர் சரிபார்ப்பு பணியை ஆய்வு செய்வார்கள். இதுவரை வாக்காளர் பட்டியலில் ஒரு கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளனர்” என்றார். மேலும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Categories

Tech |