நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் 50 வருடங்களை நிறைவு செய்து பொன் விழா காண்கிறார். சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் துரைமுருகனை பாராட்டி முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் துரைமுருகனின் பெருமைகளை சுட்டிக்காட்டி பேசினர். அந்த வகையில் திமுகவின் எம்பியான கனிமொழியும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “தன்னுடைய இளமைப் பருவத்திலிருந்து தலைவர் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் சட்டமன்ற பொன் விழா நாள். தமிழக முதல்வர் தளபதியின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் இவர். கழகத்தினுடைய முன்னேற்றத்திற்கு எப்போதும் உறுதுணையாக நிற்கும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்” என்று தெரிவித்துள்ளார்.