தலீபான்களுக்கு எதிரான தாக்குதலில் ரத்தம் சிந்தவும் தயார் என்று அகமது மசூத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இது போராட்டக்காரர்களின் கோட்டையாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 199௦ ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய தலீபான்களால் கூட இவர்களை நெருங்க முடியவில்லை. தற்பொழுது ஆப்கானை கைப்பற்றியுள்ள தலீபான்கள் தங்களுக்கு சமமாக இருக்கும் பாஞ்ஷிர் போராட்டக்காரர்களை அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பள்ளத்தாக்கு அகமது மசூத் மற்றும் அவரின் ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை அதிபர் அம்ருலா சாலே ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் போருக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் தலீபான்கள் இவர்களை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும் தலீபான்கள் வன்முறையை கையாண்டால் ரத்தம் சிந்தவும் நாங்கள் தயார் என்று அகமது மசூத் கூறியுள்ளார்.