Categories
மாநில செய்திகள்

இன்று அப்துல்கலாம் மணிபண்டபம் திறப்பு…. பார்வையாளர்கள் செல்ல அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்திற்கு பார்வையாளர்கள் செல்ல தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அப்துல்கலாம் மணிமண்டபம் திறக்கப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரையிலும் பொதுமக்கள் அப்துல் கலாம் மணி மண்டபத்தில் நினைவு அஞ்சலி செலுத்தவும், புத்தகங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |