Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுவே வேறு இடமாக இருந்திருந்தால்…. அவரை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்…. கண்கலங்கிய அமைச்சர் துரைமுருகன்…!!!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் 50 வருடங்களை நிறைவு செய்து பொன் விழா காண்கிறார். சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் துரைமுருகனை பாராட்டி முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக ஒருமனதாக நிறைவேறியது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலரும் துரைமுருகனின் பெருமைகளை சுட்டிக்காட்டி பேசினர். இந்தப் பாராட்டு தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து துரைமுருகன் சட்டசபையில் பேசுகையில், “என் வாழ்க்கையில் எத்தனையோ மேடைகளில் நான் பேசியிருக்கிறேன் ஆனால் வேறு வார்த்தைகளை தேடி அடைந்ததே கிடையாது ஆனால் இன்றைக்கு எனக்கு. நான் வார்த்தைகளை தேடியதே கிடையாது.

ஆனால் இப்போது எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை. என்ன பேசுவதென்று தெரியவில்லை. என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள், தோல்விகள் வந்தாலும் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தது போல என்னுடைய தலைவர் மு.க ஸ்டாலின் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அவையிலேயே எல்லா கட்சித் தலைவர்களும் ஒட்டுமொத்தமாக பாராட்டியதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் தலைவர் இன்றைக்கு என் மீது காட்டிய பாசம், கொட்டி அன்பு வார்த்தைகள் இதை கேட்டு நான் நெகிழ்ந்து போய் உள்ளேன் .

நான் சாதாரணமான கிராமத்துப் பையன். ஒரு விவசாயினுடைய மகன். தலைவர் கருணாநிதி என்னிடம் ஒரு நண்பனைப் போல பழகினார். நான் யார்? என்ன சாதி? எந்த ஊர்? என்று கூட அவர் கேட்பது கிடையாது. என் மீது தனி பற்றும் பாசமும் வைத்திருந்தார். என்னுடைய வழிகாட்டி அவர். அவருடைய மறைவிற்கு பிறகு எனக்கு அந்த இடத்தில் ஒரு வெற்றிடம் ஏற்படுமோ? என்று நினைத்த நிலையில் மு.க ஸ்டாலின் அவர்கள் தந்தையின் பாசத்தை மிஞ்சிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்.

நான் நினைத்துப் பார்க்காத இப்படிப்பட்ட ஒரு கவுரவத்தை வழங்கி எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தியுள்ளார். இதற்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. இதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இந்த அவையை தவிர வேறு இடமாக இது இருந்திருந்தால் நான் மு.க ஸ்டாலினை கட்டிப்பிடித்து அழுதிருப்பேன். எனக்கு முதல்முறையாக எனக்கு பேசத் தெரியவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறேன்” என்று துரைமுருகன் கண் கலங்கி நின்றார்.

Categories

Tech |