மருந்து மாத்திரைகைளை உட்கொள்ள உதவியாக ரஜினி ஐஸ்வர்யா தனுஷையும் இமயமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளார்.மது, புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டுவருகிறார் ரஜினிகாந்த். இதற்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவருடன் இந்தப் பயணத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரஜனிகாந்த் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை முதலே ஆசிரமத்தில் உள்ள பக்தர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
பின்னர் இங்கிருந்து கேதர்நாத் செல்லவுள்ள ரஜினி, அதனைத்தொடர்ந்து இமயமலையில் கடந்தாண்டு கட்டிய பாலாஜி குகைக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பின் அங்கிருந்து பாபா குகைக்கு சென்று தியானம் செய்யவும் உள்ளாராம்.ஒரு வார கால பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினியின் பயண கால அளவு நீட்டிக்கவும் அல்லது குறைக்கவும் வாய்ப்புள்ளதாம். இந்த ஆன்மிகப் பயணம் முடிவடைந்த பின்பு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும், தனது 168ஆவது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் வலம்வருகின்றன.