விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை வருவாய் துறை வேளாண்மைத் துறை மற்றும் கால்நடைத்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து தரிசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் பயனற்ற நிலையில் உள்ள நிலங்களையும் தேர்வு செய்து அறிவியல் முறைப்படி நிலத்தினை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக மரம் நடும் திட்டத்தின் ஒருங்கிணைந்த பணிகள் “பசுமை விடியல்” என்ற திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமாக இந்த பணிகள் அனைத்தும் நடைபெற உள்ளது. இந்த மரம் நடும் பணியை தொடங்கி வைத்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்..ஆர். ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்டத்திலுள்ள கால்நடை மேய்ச்சல், புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அந்த நிலங்களை பசுமையாக மாற்றும் பணியை “பசுமை விடியல்” திட்டத்தின் படி படிப்படியாக செயல்படுத்த இருக்கிறது. கருவேல மரங்கள் விரைவில் தூர்வாரும் பணியை முதல்வர் உத்தரவின் பேரில் செய்யப்படும். கடந்த ஆட்சியில் தூர்வாரியது போல் இல்லாமல் இந்த ஆட்சியில் உண்மையாக தூர்வாரப்படும் என்று தெரிவித்துள்ளார்.