Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் வாகன ஓட்டுனர் சுட்டுக் கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வாகன ஓட்டுனரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வாகனம் ஓட்டி வந்தார். அவரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்த கொலையில்  இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் சோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலில் ஆப்பிள் வியாபாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.இந்த தாக்குதலில்   ஈடுபட்டதும் பயங்கரவாதிகள் என்றே காவலர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |