தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் 8% வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தேசிய நெடுஞ்சாலைத்துறை கைவிடாத பட்சத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும் எரிபொருள், எரி காற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டு சுங்க கட்டணத்தை விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் ரத்தத்தை குடிக்கும் கொடுஞ்செயல் என்று சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.