தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த தனியாருக்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை what’s app & Google meet- ல் நடத்த தனியார் அமைப்புக்கு பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் அறிவியல் மையங்கள் மற்றும் நகரும் அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் அமைப்பதற்கு அகஸ்தியா பன்னாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்பாதிக்கப்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.