சீக்கிய கோவிலுக்கு செல்ல இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் சிறப்பு அனுமதி வழங்கிய பின்னரே இந்தியர்கள் அங்கு சென்று வருகின்றனர். இதனையடுத்து அங்குள்ள கர்தார்பூரில் இருக்கும் சீக்கிய கோவிலுக்கு இந்திய சீக்கியர்கள் சென்றுவர சிறப்பு வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக கடந்த மே 22-ஆம் தேதி முதல் அக்கோவிலுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் நினைவு தினம் அடுத்த மாதம் செப்டம்பர் 22 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக ஏராளமான இந்தியர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சீக்கிய கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆகவே இதன் காரணமாக செப்டம்பரில் அக்கோவிலுக்குள் செல்ல இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.